எஸ்.எம்.எஸ்., மோசடி ரூ.3 லட்சம் ஏமாற்றம்
எஸ்.எம்.எஸ்., மோசடி ரூ.3 லட்சம் ஏமாற்றம்
எஸ்.எம்.எஸ்., மோசடி ரூ.3 லட்சம் ஏமாற்றம்
ADDED : செப் 14, 2011 01:12 AM
திண்டுக்கல் :நான்கரைக் கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி, பண மோசடி செய்தவர்கள் மீது, திண்டுக்கல்லில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
வேடசந்தூர் சுல்தான் அலி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன்,29. இவர், சந்திரசேகரன் எஸ்.பி.,யிடம் அளித்துள்ள புகார்:எனது மொபைல்போனுக்கு, கடந்த 2010ல், எஸ்.எம்.எஸ்., வந்தது. அமெரிக்காவில், கோகோகோலா நிறுவன ஆண்டு விழாவை முன்னிட்டு, எனக்கு 10 லட்சம் டாலர் பரிசு கிடைத்துள்ளதாகவும், இ-மெயிலில் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.இ-மெயிலில் தொடர்பு கொண்டேன். அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் ஆண்டர்சன், பரிசுத் தொகையை எடுத்துக் கொண்டு டில்லி வந்துள்ளதாகத் தகவல் தரப்பட்டது. தொடர்பு கொண்ட ஆண்டர்சன், 'வரி செலுத்த வேண்டும். வங்கிக் கணக்கில் பணம் போடுங்கள்' என்றார்.இதன்படி, 3.22 லட்ச ரூபாய் செலுத்தினேன். பின், அவருடைய மொபைல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கூறியிருந்தார்.இது குறித்து, மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் விசாரிக்கிறார்.