திருச்சி மேற்கு தொகுதிக்கு அக்.13ல் இடைத்தேர்தல்
திருச்சி மேற்கு தொகுதிக்கு அக்.13ல் இடைத்தேர்தல்
திருச்சி மேற்கு தொகுதிக்கு அக்.13ல் இடைத்தேர்தல்

சென்னை: அமைச்சர் மரியம்பிச்சை மரணமடைந்ததால், திருச்சி மேற்குத் தொகுதியில் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப, வரும் அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., வெற்றி பெற்றதும், அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றவர் மரியம்பிச்சை.
இதன்படி, இம்மாதம் 19ம் தேதி இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்றே மனு தாக்கல் துவங்குகிறது. மனு தாக்கலுக்கு செப்., 26 கடைசி நாள். ஓட்டுப் பதிவு அக்., 13லும், ஓட்டு எண்ணிக்கை அக்., 17 லும் நடக்கிறது. ஓட்டுப் பதிவு காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை, அக்.,17 காலை 8 மணிக்கு துவங்கும். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, திருச்சி மாவட்டம் முழுமைக்கும் தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்றே அமலுக்கு வந்துவிட்டன. இதனால், இந்த மாவட்டத்தில் புதிதாக வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்குவது, அறிவிப்பது, இலவசங்கள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 15ம் தேதியன்று, தமிழக அரசு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, லேப்-டாப், கறவை மாடுகள் வழங்கும் திட்டங்களை துவக்க உள்ளது. ஆனால், இத்திட்டங்களை திருச்சி மாவட்டத்தில், தேர்தல் முடியும் வரை செயல்படுத்த முடியாது. இதேபோல, அக்., 15 க்கு மேல், உள்ளாட்சித் தேர்தலை நடத்த, தமிழக மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அக்., 24 க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும். தற்போது, திருச்சி மேற்குத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பில், இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
தேர்தல் அட்டவணை
மனு தாக்கல் துவக்கம் செப்டம்பர் 19