ADDED : ஆக 11, 2011 04:48 AM
ஊட்டி:ஊட்டி அரசு கலை கல்லூரியில் பட்ட படிப்புகளுக்கு கடைசி கலந்தாய்வு
வரும் 16ம் தேதி நடக்கிறது.ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர்(பொ) சதாசிவம்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஊட்டி அரசு கலை கல்லூரியில் பி.ஏ.,
பி.எஸ்.
சி., பி.காம்., பி.காம்., சி.ஏ., பட்ட படிப்புகளுக்கு கடைசி
கலந்தாய்வு வரும் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு கல்லூரி கலையரங்கத்தில்
நடக்கிறது. அப்போது தகுதி அடிப்படையில் வாய்ப்பிருப்பின் மாணவர்களுக்கு
சேர்க்கை வழங்கப்படும். எனவே, ஏற்கனவே விண்ணப்பித்து கல்லூரியில் சேர இடம்
கிடைக்காத மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரலாம். சேர்க்கைக்கு வரும்போது
மதிப்பெண் பட்டியல் மூலச்சான்று, மாற்று சான்றிதழ், ஜாதிச்சான்று, நடத்தை
சான்று ஆகியவை அசல் மற்றும் தேவையான நகல்கள், சேர்க்கை கட்டணம் 2000
ரூபாய், பெற்றோர், பாதுகாவலருடன் கலந்து கொள்ள வேண்டும்.துறை வாரியாக தமிழ்
6, ஆங்கிலம் 3, வணிகவியல், வணிகவியல் சி.ஏ., 14/8, கணிதம் 14,
பாதுகாப்பியல் 25, பொருளியல் 41, வரலாறு, சுற்றுலாவியல் 36/27, தாவரவியல்
6, வேதியியல் 13, விலங்கியல் 16, கம்ப்யூட்டர் சயின்ஸ் 5, விலங்கியல் 11,
இயற்பியல் 16 என மொத்தம் 202 இடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு சதாசிவம்
கூறியுள்ளார்.