Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்குஇன்று பொதுமாறுதல் கலந்தாய்வு

நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்குஇன்று பொதுமாறுதல் கலந்தாய்வு

நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்குஇன்று பொதுமாறுதல் கலந்தாய்வு

நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்குஇன்று பொதுமாறுதல் கலந்தாய்வு

ADDED : செப் 16, 2011 12:44 AM


Google News
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அரசு நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று(16ம் தேதி) துவங்குகிறது.இது குறித்து விழுப்புரம் சி.இ.ஓ., குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்குதல், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு இன்று (16ம் தேதி) காலை விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் துவங்குகிறது. அன்று மதியம் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள்ள படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்குதல், பட்டதாரி தமிழாசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.நாளை (17ம் தேதி) காலை தரம் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குதல், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வும், மதியம் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்த நடுநிலை பள்ளியில் 6,7,8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள்ள படாத இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

அதனை தொடர்ந்து 19ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், மதியம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது.இதனையடுத்து 20ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும், மதியம் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் அந்தந்த மாவட்ட கலந்தாய்வு மையங்களில் நடக்கிறது.இவ்வாறு சி.இ.ஓ., குப்புசாமி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us