/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பராமரிப்பு இல்லாத நகராட்சி அலுவலக கட்டடத்தால் அச்சம்பராமரிப்பு இல்லாத நகராட்சி அலுவலக கட்டடத்தால் அச்சம்
பராமரிப்பு இல்லாத நகராட்சி அலுவலக கட்டடத்தால் அச்சம்
பராமரிப்பு இல்லாத நகராட்சி அலுவலக கட்டடத்தால் அச்சம்
பராமரிப்பு இல்லாத நகராட்சி அலுவலக கட்டடத்தால் அச்சம்
ADDED : செப் 23, 2011 09:59 PM
உடுமலை : உடுமலை நகராட்சி அலுவலக கட்டடம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள
வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை நகராட்சி அலுவலகத்தின் கீழ்
பகுதியில் கமிஷனர் அறை உள்ளிட்ட அலுவலக அறையும்; மேல்பகுதியில், நகர் மன்ற
கூட்ட அரங்கமும் உள்ளது. நகராட்சிக்கு வரி செலுத்துதல், பிறப்பு, இறப்பு
சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மக்கள் வந்து
செல்கின்றனர். பல்வேறு மக்களும் வந்து செல்லும் நகராட்சி கட்டடம்
பராமரிப்பின்றி உள்ளது. மேற்பகுதியில் நகர்மன்ற கூட்ட அரங்கிலுள்ள ஜன்னல்
கண்ணாடிகள் உடைந்துள்ளன. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால்,
கட்டடத்தின் மேல் செடிகளும் வளர்ந்துள்ளதுடன், பாசிபடிந்தும்
காணப்படுகின்றன.எனவே, நகராட்சி கட்டடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.