/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக மனித சங்கிலிஅன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக மனித சங்கிலி
அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக மனித சங்கிலி
அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக மனித சங்கிலி
அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக மனித சங்கிலி
ADDED : ஆக 24, 2011 12:59 AM
தர்மபுரி: தர்மபுரியில் இன்று (ஆக.,24) அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாகவும், வலுவான ஜன் லோக்பால் மசோதவை வேண்டியும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் மனித சங்கிலி மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க மாவட்ட பொறுப்பாளர் வினோத் கூறியதாவது: அரசியல்வாதியும், அதிகாரியும் தண்டிக்கப்படுவதில்லை.
ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் திருப்ப பெறப்படுவது இல்லை. இதற்கு காரணம் வலுவான சட்டம் இல்லை. சி.பி.ஐ., அல்லது சி.வி.சி., இவர்களை தண்டிக்க முடிவதில்லை. ஊழல்வாதிகளை தண்டிக்க வலுவான சட்டம் வேண்டும். தவறான முறையில் சேர்த்த சொத்துக்களை மீண்டும் பெறப்பட வேண்டும். ஊழல் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் சிறைக்கு அனுப்ப வலுவான சட்டம் தேவை அதுதான் ஜன லோக்பால். ஒரு ஆணையம் ஊழல்வாதிகளை புகார் எழுந்த இரு ஆண்டுகளில் தண்டிக்க கூடய ஒரு சட்டம். அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து தனித்து இயக்க கூடியது. தவறான முறையில் சேர்த்த சொத்துக்களை மீண்டும் நாட்டின் கஜானாவுக்கு கொண்டு வரக்கூடியது.
வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வர டில்லியில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஸாரேவை ஆதரித்து தர்மபுரியில் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து மாலை 3.30 மணி முதல் 5 மணி வரையில் மனித சங்கிலி நடக்கிறது. இதில், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று சிறப்பித்து, வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்ற வலு சேர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


