/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ச.ம.க.வினர் விருப்ப மனுஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ச.ம.க.வினர் விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ச.ம.க.வினர் விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ச.ம.க.வினர் விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ச.ம.க.வினர் விருப்ப மனு
ADDED : செப் 06, 2011 01:03 AM
தென்காசி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் ச.ம.க.வினரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியை அக்கட்சியின் தலைவரும் தென்காசி எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார் துவக்கி வைத்தார்.
தமிழத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை துவக்கியுள்ளன. ச.ம.க.சார்பில் மாநகராட்சி தலைவர், மாநகராட்சி கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், டவுன் பஞ்.,தலைவர், டவுன் பஞ்.,கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை தென்காசியில் அக்கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார் துவக்கி வைத்தார். நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்ப மனுக்களை வழங்கினர். அந்தந்த பொறுப்புக்கு உரிய கட்டணம் டி.டி.யாக விண்ணப்பத்துடன் பெறப்பட்டது. விண்ணப்பம் பெறுவது மாவட்ட தலைவர்கள் மூலம் தொடர்ந்து நடக்கும் என சரத்குமார் கூறினர். நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன், துணை பொது செயலாளர் இளஞ்சேரன், மாநில தொழிற்சங்க தலைவர் சுதாகர், கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், தென்மண்டல அமைப்பு செயலாளர் சுந்தர், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் லாரன்ஸ், மேற்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை, தென்காசி ஒன்றிய செயலாளர் மிராசு, நகர செயலாளர் வில்சன், இலஞ்சி அருணாசலம், தென்காசி அருணாசலம் (எ) நந்து மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.