ADDED : ஜூலை 25, 2011 01:55 AM
திருச்சி: திருச்சி சுப்பிரமணியபுரம் சி.வி.கே., தெருவை சேர்ந்த இருதயராஜ் மகள் இவாஞ்சலின் (18).
இவர் மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து புத்தகம் வாங்குவதுக்காக அருகில் உள்ள புத்தகக்கடைக்கு சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்த வாலிபர் ஒருவர் அவரது கழுத்திலிருந்த ஒன்னரை பவுன் செயினை அறுத்துச் சென்றார். இதுகுறித்து கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.