Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நடராஜர் கோவிலில் உழவாரப்பணி

நடராஜர் கோவிலில் உழவாரப்பணி

நடராஜர் கோவிலில் உழவாரப்பணி

நடராஜர் கோவிலில் உழவாரப்பணி

ADDED : ஆக 03, 2011 10:08 PM


Google News

சிதம்பரம் : கடலூர் மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சார்பில் உழவாரப்பணி நடந்தது.

மேல்மருவத்தூர் ஆதிபாரசக்தி சித்தர் பீட நிறுவனர் தெய்வத்திரு கோயில் நாயக்கரின் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் உழவாரப்பணி மற்றும் சுகாதார பணிகள் நடந்தது. மாவட்ட செயலாளர் காரணதேவேந்திரன் தொடங்கி வைத்தார். முதல் பிரகாரம், இரண்டாம் பிரகாரம், பொன்னம்பலம் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை படுத்தும் பணி நடந்தது. கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். மகளிர் அணி பொறுப்பாளர்கள் கமலா, ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி, கிருஷ்ணவேணி, வசந்தி, ஜெயலட்சுமி, புகழேந்தி, திவ்யா, லாவண்யா, முத்தமிழ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து உழவாரப்பணி நடைபெற்றது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us