/உள்ளூர் செய்திகள்/சேலம்/குப்பை அள்ளும் தொட்டி வீண்வாகனங்களும் பாடாவதி நிலைகுப்பை அள்ளும் தொட்டி வீண்வாகனங்களும் பாடாவதி நிலை
குப்பை அள்ளும் தொட்டி வீண்வாகனங்களும் பாடாவதி நிலை
குப்பை அள்ளும் தொட்டி வீண்வாகனங்களும் பாடாவதி நிலை
குப்பை அள்ளும் தொட்டி வீண்வாகனங்களும் பாடாவதி நிலை
ADDED : செப் 12, 2011 03:14 AM
ஆத்தூர்:ஆத்தூர் நகர் பகுதிகளில், குப்பை அள்ளுவதற்கு பயன்படுத்தும்
இரும்பு பெட்டிகள் துருப்பிடித்து, ஓட்டை விழுந்த நிலையில் உள்ளது. மேலும்,
குப்பை அள்ளும் வாகனங்களும் பாடாவதியான நிலையில் உள்ளதாக புகார்
எழுந்துள்ளது.ஆத்தூர் முதல் நிலை நகராட்சியில், மொத்தம், 33 வார்டுகள்
உள்ளன. அதில், ராணிப்பேட்டை, கடைவீதி, காந்தி நகர், உடையார்பாளையம்,
புதுப்பேட்டை, பழைய பேட்டை, அம்பேத்கர் நகர் போன்ற பகுதிகளில் உள்ள, 484
தெருக்களில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து
வருகின்றனர்.அதன்படி, குடியிருப்பு வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில்
சேகரமாகும் குப்பை, கழிவுகளை, நகராட்சி துப்பரவு பணியாளர்கள் மூலம்
சுத்தம் செய்யப்படுகிறது.
அவ்வாறு சேகரமாகும் குப்பைகளை, வேன், மினி ஆட்டோ
என, 10 வாகனங்களில் அள்ளிச் சென்று, 33வது வார்டில் பகுதியில் கொட்டி
வருகின்றனர்.தற்போது, மூன்று குப்பை அள்ளும் இரும்பு தொட்டிகள் போதிய
பராமரிப்பின்மை காரணமாக, துருப்பிடித்து ஓட்டை விழுந்துள்ளது. அந்த
தொட்டிகளில் குப்பை எடுத்துச் செல்லும்போது, சாலைகளில் சிதறிக் கொண்டு
செல்கிறது.தவிர, குப்பை அள்ளும் வாகனங்களும் போதிய பராமரின்றி
காணப்படுவதால், படாவதியான நிலையில் காணப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு, குப்பை அள்ளும் தொட்டிகளை
சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.