/உள்ளூர் செய்திகள்/சேலம்/கோட்டை மாரியம்மன் கோவிலில்ஃபோட்டோ, வீடியோ எடுக்க தடைகோட்டை மாரியம்மன் கோவிலில்ஃபோட்டோ, வீடியோ எடுக்க தடை
கோட்டை மாரியம்மன் கோவிலில்ஃபோட்டோ, வீடியோ எடுக்க தடை
கோட்டை மாரியம்மன் கோவிலில்ஃபோட்டோ, வீடியோ எடுக்க தடை
கோட்டை மாரியம்மன் கோவிலில்ஃபோட்டோ, வீடியோ எடுக்க தடை
ADDED : ஜூலை 28, 2011 02:49 AM
சேலம்:சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்து
வருகிறது. கோவில் மூலஸ்தானம், உள், வெளி பிரகாரங்களில் ஃபோட்டோ, வீடியோ
எடுத்தால் குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும், என எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்
தினம் பூச்சாட்டுதலுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. ஆடி பண்டிகையை
முன்னிட்டு, கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம்
உள்ளனர். பக்தர்கள் கோவிலுக்குள் வந்து, அம்மனை தரிசித்து செல்லும்
வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.ஆடி பண்டிகையை முன்னிட்டு
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, திருவீதி உலா, தங்கத்தேர் உலா மற்றும்
அன்னதானம் வழங்குதல் போன்றவை கோவிலில் நடந்து வருகிறது. நேற்று நடந்த
விழாவில், கோட்டை மாரியம்மன் புஷ்ப வாகனத்தில் திருவீதி உலா நடந்தது.
குலாலர் நடராஜர் பஜனை பக்தஜன சங்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில், அம்மனுக்கு
சிறப்பு ஆராதனை, அபிஷேகம் நடந்தது.பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்ய சிறப்பு
வழி தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்து ரூபாய் கட்டணத்தை செலுத்தி,
சிறப்பு தரிசன நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சென்று அம்மனை வழிபடலாம்.
மூலஸ்தானம் மற்றும் கோவில் உள் பிரகாரம், வெளி பிரகாரங்களில் ஃபோட்டோ,
வீடியோ எடுக்கக் கூடாது. மீறி ஃபோட்டோ, வீடியோ எடுத்தால் குற்றவியல்
நடவடிக்கை தொடரப்படும், என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.