"என்னை மாடுனு சொல்றாருங்க...' குமுறிய மண்டலத் தலைவர்
"என்னை மாடுனு சொல்றாருங்க...' குமுறிய மண்டலத் தலைவர்
"என்னை மாடுனு சொல்றாருங்க...' குமுறிய மண்டலத் தலைவர்
மதுரை : ஒவ்வொரு கூட்டத்திலும், தன்னை மாடுகளுடன் ஒப்பிடுவதாக, மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் மாணிக்கம் (தி.மு.க.,) குமுறினார்.
பொருட்படுத்தாமல், மண்டலத் தலைவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ''ரொம்பப் பேசுறீங்க... அடுத்த 'டார்கெட்' நீங்க தான்'' என்ற, சாலைமுத்துவின் பேச்சில், கடுப்பான மண்டலத் தலைவர், ''என்னங்க மிரட்டுறீங்களா...? பாருங்க மேயர்... இவர் மிரட்டுறாரு...'' என்றார். ''அட இருப்பா... துள்ளுற மாடு நிச்சயம் பொதி சுமக்கும்'' என, சாலைமுத்து தொடர்ந்தார்.
''பார்த்தீங்களா மேயர்... ஒவ்வொரு கூட்டத்திலும், அ.தி.மு.க.,வினர் என்னை மாடுகளுடன் ஒப்பிடுகின்றனர்; என் ஜாதியை குறிவைத்து அவமானப்படுத்துறாங்க'' என, குமுறினார்.
''ஜாதியை மனதில் வைத்து பேசலை, நானும் வீட்டில் மாடு வளர்க்கிறேன்; 'மாட்டுக்கார வேலன்' படத்தில், எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர்., நடித்திருக்கிறார்'' என்றார்.
''அப்போ... என்னை மாடுனு சொல்றீங்களா...?'' என, மாணிக்கம் கேட்டார். ''இருக்கலாம்...'' என, கூலாக பதிலளித்தார் சாலைமுத்து. ஒருவழியாக, மாடு பிரச்னை முடிவுக்கு வர, மனித பிரச்னைகள் குறித்த விவாதம் தொடர்ந்தது.