/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சி வார்டு ஒதுக்கீடு விவரம் வெளியீடுமாநகராட்சி வார்டு ஒதுக்கீடு விவரம் வெளியீடு
மாநகராட்சி வார்டு ஒதுக்கீடு விவரம் வெளியீடு
மாநகராட்சி வார்டு ஒதுக்கீடு விவரம் வெளியீடு
மாநகராட்சி வார்டு ஒதுக்கீடு விவரம் வெளியீடு
ADDED : செப் 15, 2011 11:57 PM
கோவை:கோவை மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு விவரம் நேற்று வெளியிடப்பட்டதை
தொடர்ந்து, அரசியல் கட்சியினர் மத்தியில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு
தொற்றிக்கொண்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் பணிகள் வேகம்
பிடித்துள்ளன. ஓரிரு நாட்களில் தேர்தல் அறிவிப்பும் வெளியாகவுள்ளது.
அரசியல் கட்சிகள் அனைத்தும், தங்கள் கட்சியினரிடம் இருந்து, விருப்ப
மனுக்களை வாங்கி முடித்து விட்டனர்.தேர்தலில், முக்கிய உள்ளாட்சி
அமைப்புகளை கைப்பற்ற, கடும் போட்டி இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 'பண பலம் மிகுந்த கோவை மாநகராட்சியை
கைப்பற்றப்போவது யார்' என்ற எதிர்பார்ப்புடன், அரசியல் கட்சியினர் அனைவரும்
ஆவலுடன் காத்திருக்கின்றனர்.குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம்
ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிகள், துடியலூர், வெள்ளக்கிணர்,
சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, காளப்பட்டி, வீரகேரளம், வடவள்ளி ஆகிய ஏழு
பேரூராட்சிகள், விளாங்குறிச்சி ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டதால், முன்பு 72
வார்டுகளுடன் இருந்த கோவை மாநகராட்சி, இப்போது 100 வார்டுகளை கொண்டதாக
உருமாறியுள்ளது.
இம்மாநகராட்சிக்கான வார்டு ஒதுக்கீடு விவரம், நேற்று தமிழக
அரசால் வெளியிடப்பட்டது. இதன்படி, தாழ்த்தப்பட்டோர் (பொதுப்பிரிவு)- ஆறு
வார்டுகள், தாழ்த்தப்பட்டோர் (பெண்கள்)- மூன்று வார்டுகள், பெண்கள்-
(பொதுப்பிரிவு) 31 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற வார்டுகள் அனைத்தும்,
பொதுப்பிரிவினருக்கானவை.தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான வார்டு எண்கள்: 21
(பூசாரிபாளையம்), 27 (சின்னவேடம்பட்டி), 31 (சரவணம்பட்டி), 63
(சிங்காநல்லூர், கள்ளிமடை), 70 (புலியகுளம்), 93
(குனியமுத்தூர்).தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (பெண்கள்) வார்டு எண்கள்: 26
(வெள்ளக்கிணர்), 87 (குனியமுத்தூர்), 95 (குறிச்சி).பெண்கள் (பொது)
பிரிவினருக்குõன வார்டு எண்கள்: 1 (துடியலூர்), 2 (துடியலூர்), 6
(கவுண்டம்பாளையம்), 12 (குப்பக்கோனாம்புதூர் மேற்கு மற்றும் சாயிபாபா
காலனி), 13 (வெங்கிட்டாபுரம் மற்றும் ஜவஹர்புரம்), 15
(பாப்பநாயக்கன்புதூர்), 16 (வடவள்ளி), 17 ( வடவள்ளி), 18 (வீரகேரளம்), 20
(சீரநாயக்கன்பாளையம்), 22 (பாரதிபார்க் மற்றும் காமராஜபுரம் பகுதி), 23
(ஆர்.எஸ்.புரம் வடக்கு), 34 (காளப்பட்டி), 38 (பீளமேடு கிழக்கு),
40(கிருஷ்ணாபுரம்), 50 (சிவானந்தா காலனி), 53 (சங்கனூர் பள்ளம், ஏரிமேடு,
பாரதியார் ரோடு), 65 (பீளமேடு சவுரிபாளையம்), 66 (உடையாம்பாளையம்), 67
(ராமநாதபுரம் கிழக்கு), 71 (ரேஸ்கோர்ஸ்), 72 (காட்டூர்), 73 (அரசு பொது
மருத்துவமனை பகுதி), 75 (நஞ்சுண்டாபுரம்), 77 (சொக்கம்புதூர் வடக்கு
ஹவுசிங் யூனிட்), 78 (செல்வபுரம்), 88 (குனியமுத்தூர்), 89 (குனிய
முத்தூர்), 90 (குனியமுத்தூர்), 91 (குனியமுத்தூர்), 99 (குறிச்சி).'கோவை
மாநகர மேயர் பதவிக்கான ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்கும்' என்று அரசியல்
கட்சியினர் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதில் மாற்றம் எதுவும்
செய்யப்படவில்லை. முன் இருந்ததை போலவே, மேயர் பதவி, பொதுப்பிரிவிலேயே
இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.இட ஒதுக்கீடு விவரம்
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாநகரை சேர்ந்த அரசியல் கட்சியினர்
மத்தியில் தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.


