/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பெரம்பலூரில் இன்று ஆசிரியர் கவுன்சலிங்பெரம்பலூரில் இன்று ஆசிரியர் கவுன்சலிங்
பெரம்பலூரில் இன்று ஆசிரியர் கவுன்சலிங்
பெரம்பலூரில் இன்று ஆசிரியர் கவுன்சலிங்
பெரம்பலூரில் இன்று ஆசிரியர் கவுன்சலிங்
ADDED : செப் 16, 2011 12:00 AM
பெரம்பலூர்: 'பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலை, துவக்க பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகையான ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் இன்று செப்., 16ம் தேதி முதல் பெரம்பலூரில் நடக்கிறது' என சி.இ.ஓ., ராஜன், டி.இ.ஓ., வசந்தா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து வகை பஞ்சாயத்து யூனியன், அரசு நடுநிலை, துவக்க நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பெரம்பலூர் பாத்திமா தொடக்கப்பள்ளியில் இன்று 16ம் தேதி, 17ம் தேதி, 19ம் தேதி, 20ம் தேதி ஆகிய நாட்களில் மாறுதல் மற்றும் பதிவு உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு 2011-2012ம் ஆண்டுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. வரும் 20ம் தேதி காலை 10 மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


