/உள்ளூர் செய்திகள்/சேலம்/"லேடீஸ் சர்க்கிள்- 28' நிர்வாகிகள் பதவியேற்பு"லேடீஸ் சர்க்கிள்- 28' நிர்வாகிகள் பதவியேற்பு
"லேடீஸ் சர்க்கிள்- 28' நிர்வாகிகள் பதவியேற்பு
"லேடீஸ் சர்க்கிள்- 28' நிர்வாகிகள் பதவியேற்பு
"லேடீஸ் சர்க்கிள்- 28' நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 12, 2011 01:27 AM
சேலம்: சேலம் லேடீஸ் சர்க்கிள்- 28 சார்பில், நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டன. சேலம் லேடீஸ் சர்க்கிள்- 28 நிர்வாகிகள் பதவியேற்பு விழா,
சேலத்தில் நடந்தது. சங்கத் தலைவியாக அர்ச்சனா, செயலாளராக நித்யா,
பொருளாளராக சவுமியா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். அகில இந்திய லேடீஸ்
சர்க்கிள் துணைத்தலைவி ரம்யா சிறப்பாளராக கலந்து கொண்டனர். உலக மக்கள்
தினத்தை முன்னிட்டு, வாசகங்கள் வெளியிடப்பட்டன.
விழாவில், வள்ளலார் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் எல்.கே.ஜி., மாணவிக்கு
கல்வி உதவித்தொகையாக, 4,000 ரூபாய், பாலிடெக்னிக் மாணவன் முருகேசனுக்கு
கல்விக் கட்டணம், 5,000 ரூபாய், சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் நிறுவனத்துக்கு
இரண்டு மின்விசிறிகள் வாங்க, 3,000 ரூபாய், பாலிடெக்னிக்கில் முதலிடம்
பெற்ற முருகேசனுக்கு பள்ளி சீருடை வாங்க, 1,500 ரூபாய், தியான் மனவளர்ச்சி
குன்றிய பள்ளிக்கு ஓராண்டுக்கு மதிய உணவு சாப்பிட, 26 ஆயிரத்து 520 ரூபாய்,
சேவா சமாஜ் அனாதை இல்ல குழந்தைகளுக்கு சிற்றுண்டிக்கு, 4,000 ரூபாய்,
மாடர்ன் மெட்ரிக் பள்ளி மாணவிக்கு பாடபுத்தகம் வாங்க, 700 ரூபாய் என,
மொத்தம் 44 ஆயிரத்து 720 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.


