/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : ஜூலை 12, 2011 12:02 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா ரோட்டரி தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
முன்னாள் மாவட்ட ஆளுநர் சிவஞானசெல்வ, உதவி ஆளுநர் இளங்கோவன் ஆகியோர் பேசினர். புதிய தலைவராக பாலசுப்பிரமணியன், செயலாளர்க செந்தில்குமார், பொருளாளராக சதாபத்மநாதன் மற்றும் பொறுப்பாளர்கள் பதவியேற்றனர். தேசிங்குராஜபுரம் ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருவலஞ்சுழி தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு குடிநீர் டேங்க் வழங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மாற்றுத் திறானாளிகள் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்பட்டது. கீழப்பெருமழை பள்ளி வளர்ச்சிக்கு ரூபாய் மூன்றாயிரம், பிளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு படிப்பு செலவுக்காக ரூபாய் மூன்றாயிரம் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது. எஸ்.எஸ். எல்.ஸி.,, பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.ஸி.,, பிளஸ் டூ பொதுத்தேர்வில் நூறு சதவீதம் பெற்ற புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்கப்பட்டது. இதில் வர்த்தக சங்க தலைவர் செந்தில்நாதன், லயன்ஸ் தலைவர் செல்வகணபதி, டெல்டா ரோட்டரி தலைவர் கணேசன், ஏ.ஆர்.வி., மேலாளர் ரவி, முன்னாள் தலைவர்கள் அந்தோணிபிரிட்டோ, அப்துல்ரஹீமான், ராஜேந்திரன், துணைத்தலைவர் ரவிசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.