/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மக்கள் தொகை பிரச்னை : பெண்கள் தான் தீர்வுமக்கள் தொகை பிரச்னை : பெண்கள் தான் தீர்வு
மக்கள் தொகை பிரச்னை : பெண்கள் தான் தீர்வு
மக்கள் தொகை பிரச்னை : பெண்கள் தான் தீர்வு
மக்கள் தொகை பிரச்னை : பெண்கள் தான் தீர்வு
திண்டுக்கல் : ''மக்கள் தொகை பிரச்னைக்கு தீர்வு காண பெண்கள் முன்வர வேண்டும்,'' என, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஜெயபால் பேசினார்.
இணை இயக்குனர் ஜெயபால் பேசியது: உலக மக்கள் தொகை 692 கோடியாக உயர்ந்துள்ளது. நமது நாட்டில் மக்கள் தொகை 121 கோடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் 7 கோடியும், திண்டுக்கல் மாவட்டத்தில் 21 லட்சமும் உள்ளது. இந்த வேகத்தில் மக்கள் தொகை சென்றால், சீனாவை மிஞ்சிவிடும். உத்ரபிரதேசத்தில் மக்கள் தொகை, பிரேசில் நாட்டு மக்கள் தொகைக்கு ஒப்பாகவும்; தமிழகத்தின் மக்கள் தொகை, தாய்லாந்து நாட்டின் தொகையையும் பிரதிபலிக்கின்றன. இதனால் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை, வேலையில்லா திண்டாட்டம், குடிநீர் பிரச்னை, இட பற்றாக்குறை ஏற்படுகிறது. குடும்ப நல சிகிச்சை மூலம் நம் குடும்பமும் முழு வளர்ச்சி பெறும். பெண்கள் குடும்ப கட்டுப்பாட்டை புரிந்து கொண்டால், மக்கள் தொகை பிரச்னைக்கு தீர்வு காண முடியும், என்றார்.