ADDED : ஜூலை 11, 2011 09:31 PM
திருப்பூர் : திருப்பூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில், 123
மனுக்கள் பெறப்பட்டன; நில மோசடி மற்றும் பண மோசடி தொடர்பான 34 மனுக்கள்
மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய எஸ்.பி., உத்தரவிட்டார்.
திருப்பூர் சப் - டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான
குறை தீர்ப்பு முகாம், வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று நடந்தது;
எஸ்.பி., பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். இடம் மற்றும் நிலம் சார்ந்த
பிரச்னை குறித்து 51 மனுக்கள்; பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் கடன்
பிரச்னை தொடர் பாக 59 மனுக்கள்; குடும்ப தகராறு, கண வன் - மனைவி பிரச்னை
குறித்த 13 மனுக் கள் பெறப்பட்டன. நில பிரச்னை சார்ந்த 14 மனுக்கள் மற்றும்
பண மோசடி குறித்த 20 மனுக்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து
நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.