/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் ஸ்டிரைக்அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் ஸ்டிரைக்
அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் ஸ்டிரைக்
அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் ஸ்டிரைக்
அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் ஸ்டிரைக்
ADDED : ஜூலை 11, 2011 09:24 PM
உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லூரியில், கல்லூரி நேரத்தை மாற்றியமைத்தை
கண்டித்து மாணவர்கள் 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர்.உடுமலை அரசு
கலைக்கல்லூரியில், ஷிப்ட் 1ல் காலை 8.30 மணி முதல் 1.30 மணி ; ஷிப்ட் 2
மதியம் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரையும் வகுப்புகள் நடக்கின்றன.
இந்நிலையில், காலை 8.30 மணிக்கு துவங்கும் ஷிப்ட் 1ன் நேரத்தை
மாற்றியமைத்தாக கூறி நேற்று மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் 'ஸ்டிரைக்'கில்
ஈடுபட்டனர்.இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,' வகுப்புகள் 1.30 மணிக்கு
நிறைவடைந்த பின், மதியம் பலர் பகுதி நேர வேலைக்கு சென்று வருகிறோம்.
இந்நிலையில், ஷிப்ட் 1 செயல்பட்டு வந்த நேரத்தை காலை 9.30 மணிமுதல் மாலை
3.00 மணிவரை என கல்லூரி நிர்வாகத்தினர் மாற்றம் செய்தனர்.இதனால், வேலைக்கு
செல்வதில் சிக்கல் ஏற்படுவதுடன், பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே,
நேரத்தை மாற்றியமைக்க கூடாது; மாணவர்கள் பிரச்னைகளை தெரிவிக்க கல்லூரியில்
மாணவர் சங்க தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி 'ஸ்டிரைக்'கில்
ஈடுபட்டுள்ளோம்,' என்றனர். கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்
மாணவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவர்கள்
கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் மாணவர்கள் திடீரென 'ஸ்டிரைக்'கில்
ஈடுபட்டதால், கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.