ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க வட்ட மாநாடு
ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க வட்ட மாநாடு
ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க வட்ட மாநாடு
ADDED : செப் 13, 2011 11:55 PM
காட்டுமன்னார்:காட்டுமன்னார்கோவிலில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வட்ட மாநாடு நடந்தது.வட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.
ரமேஷ் வரவேற்றார். செயலர் பெருமாள் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்டத் தலைவர் சாம்பசிவம், பாண்டுரங்கன், அரங்கராஜன், சம்மந்தம், மாவட்டச் செயலர் கண்ணன், பண்ருட்டி வட்டத் தலைவர் பலராம் பேசினர்.கூட்டத்தில் வட்டத் தலைவராக கலியமூர்த்தி, செயலராக பத்மநாபன், பொரு ளாளராக பெருமாள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்கள் தாமதமின்றி கிடைக்க உதவி தொடக்க கல்வி அலுவ லரை கேட்டுக்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.