Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/இலவச பஸ் பாஸ் எண்ணிக்கை 25 சதம் பஸ்களை அதிகரிக்காததால் மாணவர்கள் அவதி

இலவச பஸ் பாஸ் எண்ணிக்கை 25 சதம் பஸ்களை அதிகரிக்காததால் மாணவர்கள் அவதி

இலவச பஸ் பாஸ் எண்ணிக்கை 25 சதம் பஸ்களை அதிகரிக்காததால் மாணவர்கள் அவதி

இலவச பஸ் பாஸ் எண்ணிக்கை 25 சதம் பஸ்களை அதிகரிக்காததால் மாணவர்கள் அவதி

ADDED : ஆக 09, 2011 01:58 AM


Google News
மேட்டூர்:கடந்த ஐந்து ஆண்டுகளில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச பஸ்பாஸ் எண்ணிக்கை, 25 சதவீதம் அதிகரித்த நிலையில், அதற்கேற்ப கிராமங்களுக்கு காலை, மாலை நேரத்தில் இயக்கப்படும் டவுன் பஸ் எண்ணிக்கை உயராததால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.அரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளி, தனியார் பள்ளி, ஐ.டி.ஐ., அரசு கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அனைத்து மாணவர்களும் பஸ்பாஸை பயன்படுத்தி கிராமங்களில் இருந்து டவுன் பஸ்ஸில் பள்ளி, கல்லூரிக்கு செல்கின்றனர்.அதனால், பள்ளி, கல்லூரி துவங்கும், முடியும் நேரத்தில் நகரங்களில் இருந்து அருகாமையில் உள்ள கிராமங்களுக்குசெல்லு பஸ்ஸில் பயணிகள், மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழியும். நகரத்தில் இருந்து பெரும்பாலான கிராமபுறங்களுக்கு காலை, மாலை நேரத்தில் இரண்டு, மூன்று டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.மேட்டூர் தாலுகாவில், மேட்டூர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மாணவர்களுக்கு, 12 ஆயிரம் இலவச பாஸ் வழங்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் இலவச பாஸ் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை, 16 ஆயிரமாக அதிகரித்து விட்டது.

மேட்டூர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கிராமபுறங்களுக்கு, 38 டவுன்பஸ்கள் இயக்கப்பட்டது.இலவச பாஸ் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை, 25 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், இன்னமும் கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி ஒன்றியங்களில் உள்ள கிராம புறங்களுக்கு இன்னமும் அதே, 38 டவுன் பஸ்களே இயக்கப்படுகிறது.

மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப காலை, மாலை நேரத்தில் கிராமங்களுக்கு இயக்கும் டவுன் பஸ் எண்ணிக்கை உயராததால் காலைநேரம் மேட்டூர் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து நகரப்பகுதிக்கு செல்லும் பஸ்களில் மாணவர்கள் நிற்பதற்கு கூட இடம் கிடைக்காமல் மூச்சு திணறுலுடன் பயணிக்கின்றனர்.மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வழியிடை கிராமங்களில் உள்ள பெரும்பாலான பஸ் ஸ்டாப்களில் பஸ்கள் நிற்காமல் சென்று விடுகிறது. அதனால், அன்றைய தினம் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத அவலம் ஏற்படுகிறது அல்லது அந்த வழியாக செல்லும் கார், பைக் போன்றவற்றில் லிப்ட் கேட்டு நகரங்களுக்கு செல்லும் அவலமும் நீடிக்கிறது.அதனால், பஸ்ஸை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதாலும், தினமும் கிராமத்தில் இருந்து பஸ்ஸில் நிற்க கூட இடம் இன்றி நெரிசலில் சிக்கி செல்வதால் பள்ளிக்கு செல்வதற்குள் மாணவர்கள் மனதளவில் பாதிப்பதால், அவர்களின் படிப்பும் பாதிக்கிறது. மேட்டூர் தாலுகா மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.எனவே, மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, கிராமபுறங்களுக்கு காலை, மாலை நேரத்தில் மட்டுமாவது கூடுதல் டவுன்பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us