ADDED : ஜூலை 13, 2011 10:07 PM
சாயல்குடி : சாயல்குடி அருகே எஸ்.கீரந்தையில் பூங்குழலிஅம்மனுக்கு புரவி எடுப்பு விழா நடந்தது.
எஸ். கீரந்தையில் பூங்குழலி அம்மன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு புரவி எடுப்பு விழா நடந்தது. காலையில் கிராம மக்கள் அழகர் கோவிலுக்கு பொங்கல் வைத்தனர். மாலையில் சாயல்குடியிலிருந்து பொய்க் கால் குதிரை ஆட்டத்துடன் மண் குதிரைகளை சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். வி.வி.எஸ்.ஏ. சிவஞான பாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் வசந்தா, கோட்டைச்சாமித்தேவர் உள்பட கிராம மக்கள் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர். இன்று பொங்கல் விழா, கிடா வெட்டுதல் நடக்கிறது.


