Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நகராட்சி தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர்கள் தயார்

நகராட்சி தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர்கள் தயார்

நகராட்சி தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர்கள் தயார்

நகராட்சி தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர்கள் தயார்

UPDATED : செப் 18, 2011 12:12 AMADDED : செப் 17, 2011 11:28 PM


Google News
Latest Tamil News
சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.

இதில், 52 நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பல முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட 52 வேட்பாளர்களில், 13 பேர் பெண்கள்.

வேட்பாளர்கள் விவரம்:தாம்பரம் - கரிகாலன் (மாவட்ட ஜெ., பேரவை தலைவர்), பல்லாவரம் - நாகேஸ்வரன் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலர்), பம்மல் - இளங்கோவன் (நகரச் செயலர்), அனகாபுத்தூர் - ராஜா துரைபாபு (நகரச் செயலர்), மறைமலை நகர் - கோபி கண்ணன் (மாவட்ட இளைஞர் அணி தலைவர்), செங்கல்பட்டு - ஆறுமுகம் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலர்), மதுராந்தகம் - ரவி (நகரச் செயலர்), காஞ்சிபுரம் - மைதிலி திருநாவுக்கரசு (முன்னாள் எம்.எல்.ஏ.,), பூவிருந்தவல்லி - ரவிச்சந்திரன் (ஜெ., பேரவை துணைச் செயலர்), திருத்தணி - சவுந்திரராஜன் (நகரச் செயலர்). திருவள்ளுர் - பாஸ்கரன் (திருவள்ளூர் தொகுதி இணைச் செயலர்), ஆவடி - தீனதயாளன் (நகர பொருளாளர்), திருவேற்காடு - மகேந்திரன் (ஆவடி தொகுதி இணைச் செயலர்) மேல்விஷாரம் - அப்துல் ரகுமான் (பேரூராட்சி செயலர்), வாலாஜாபேட்டை - வேதகிரி (மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றத் தலைவர்), ராணிப்பேட்டை - பரிமளா மணி (மாவட்ட துணைச் செயலர்), ஆற்காடு - புரு÷ஷாத்தமன் (வார்டு கழகச் செயலர்).



அரக்கோணம் - பவானி கருணாகரன் (முன்னாள் எம்.எல்.ஏ.,), குடியாத்தம் - அமுதா சிவபிரகாசம் (மாவட்ட துணைச் செயலர்), திருப்பத்தூர் - குமார் (இளம் பெண்கள் பாசறை செயலர்), வாணியம்பாடி - நிலோபர் கபில் (மருத்துவ அணி செயலர்), ஆம்பூர் - சங்கீதா பாலசுப்பிரமணி, பேரணாம்பட் - சிவாஜி, ஜோலார்பேட்டை - வசுமதி சீனிவாசன், திருவந்திபுரம் (செய்யார்) - பாவை ரவிச்சந்திரன் (மாவட்ட முன்னாள் துணைச் செயலர்), ஆரணி - ஆனந்தகுமாரி, வந்தவாசி - ரஜிதா பேகம்.திருவண்ணாமலை - பாலசந்தர் (மாவட்ட ஜெ., பேரவை செயலர்), கடலூர் - குமரன் (நகரச் செயலர்), பண்ருட்டி - பன்னீர்செல்வம் (நகராட்சி எதிர்க்கட்சித் தலைவர்), நெல்லிக்குப்பம் - சுதாகர் (நகர இளைஞர் அணி செயலர்), விருத்தாசலம் - துரை அரங்கநாதன் (முன்னாள் எம்.எல்.ஏ.,), சிதம்பரம் - நிர்மலா (வார்டு மேலமைப்பு பிரதிநிதி).



ஆத்தூர் - உமாராணி (நகர மகளிர் அணி செயலர்), நரசிங்கபுரம் - மணிவண்ணன் (நகரச் செயலர்), எடப்பாடி - கதிரேசன் (நகர ஜெ., பேரவை செயலர்), மேட்டூர் - லலிதா சரவணன் (புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலர்), பவானி - கருப்பணன் (முன்னாள் எம்.எல்.ஏ.,), கோபி - ரேவதி தேவி (நகராட்சித் தலைவர்).சத்தியமங்கலம் - சுப்ரமணியம் (நகர ஜெ., பேரவை செயலர்), புன்செய்புளியம்பட்டி - ராஜேந்திரன் (நகரச் செயலர்), பல்லடம் - தங்கவேலு (நகர அவைத் தலைவர்), உடுமலை - சோபனா, பெரியகுளம் - ஓ.ராஜா (வார்டு முன்னாள் உறுப்பினர்), தேனி - அல்லி ராமராஜன் (நகர முன்னாள் செயலர்), கூடலூர் - சோலைராஜ் (நகரச் செயலர்), போடிநாயக்கனூர் - பழனிராஜ் (நகர துணைச் செயலர்), கம்பம் - சிவகுமார் (பொதுக்குழு உறுப்பினர்).சின்னமனூர் - சுரேஷ் (நகரச் செயலர்), சிவகங்கை - மந்தக்காளை (மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர்), தேவகோட்டை - சுமித்ரா, காரைக்குடி - கற்பகம் இளங்கோ (முன்னாள் எம்.எல்.ஏ.,).







      Our Apps Available On




      Dinamalar

      Follow us