Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

ADDED : செப் 01, 2011 09:01 PM


Google News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி கொண்டாடினர்.

திண்டுக்கல் என்.எஸ்., நகரில் உள்ள ஹரிஓம் சிவசக்தி விநாயகர் கோயிலில் காலையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வெள்ளை விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர். இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நேருஜி நகர் வழிகாட்டி விநாயகர் கோயில், கோபலசமுத்திரகரை நன்மை தரும் 108 விநாயகர் கோயில், ரயிலடி சித்திவிநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ராஜிவ்நகரில் உள்ள வினைதீர்க்கும் விநாயகர் கோயிலில் 108 தாமரை மலர்களால் அபிஷேகம் நடந்தது. முளைப்பாரி, பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். சத்திரம் தெருவில் உள்ள செல்வவிநாயகர் கோயிலில் காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. வேடசந்தூர்: கோட்டை விநாயகர் கோயில், பஸ் ஸ்டாண்ட், கார் ஸ்டாண்ட், குங்குமகாளியம்மன் கோயில்ரோடு, ஆர்.எச்.காலனி, ஆத்துமேடு, ரவுண்டனா, காமராஜர் நகர் மற்றும் கருக்காம்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, தாசரிபட்டி உட்பட பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. நால்ரோடு ஏ.ஆர்.ஆர். இன்ஜினியரிங் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 51 அடி ஆஞ்சநேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. நிர்வாக இயக்குனர் எஸ்.எம்.சுவாமி, முதன்மை மேலாளர் பாலசந்தர் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தாண்டிக்குடி: பட்டத்து விநாயகர் கோயிலில் சதூர்த்தி விழாவை முன்னிட்டு காலையில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில் சுவாமி மின் அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வத்தலக்குண்டு: விசாலாட்சி அம்மன் கோயிலில் உள்ள விநாயகருக்கு கொழுக்கட்டைகளுடன் பூஜைகள் நடந்தது. மாரியம்மன்,காளியம்மன் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன. எஸ்.தும்மலப்பட்டியில் இளைஞர் அணி சார்பில் சிறப்பு வழிபாடு,விளையாட்டு போட்டிகள் நடந்தன. காந்திநகரில் இந்து முன்னணி சார்பில் அன்னதானம் நடந்தது. மாவட்ட தலைவர் வேலுமணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பொற்செழியன் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை: சிலுக்குவார்பட்டி, கொடைரோடு, அம்மையநாயக்கனூரில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் திராளாக கலந்துகொண்டு வழிபட்டனர். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் அன்னதானம், சிறப்பு பூஜைகள் நடந்தது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us