Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கலெக்டர் மாற்றம் ஏன்? பொ.ப.து., மந்திரி விளக்கம்

கலெக்டர் மாற்றம் ஏன்? பொ.ப.து., மந்திரி விளக்கம்

கலெக்டர் மாற்றம் ஏன்? பொ.ப.து., மந்திரி விளக்கம்

கலெக்டர் மாற்றம் ஏன்? பொ.ப.து., மந்திரி விளக்கம்

ADDED : ஜூலை 24, 2011 12:57 AM


Google News

ஈரோடு: ''கலெக்டர் மாற்றத்துக்கும், தோல் ஆலை மீதான நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லை,'' என, அமைச்சர் ராமலிங்கம் விளக்கமளித்தார்.

ஈரோடு கலெக்டர் அலுவலக மனுநீதி நாள் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள், திருமண உதவி, புதிய ரேஷன்கார்டு, மூன்று சக்கர சைக்கிள், பேட்டரி பொருத்திய டூ வீலர், இலவச பட்டா என 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நல உதவிகளை, 309 பேருக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் வழங்கினார்.



ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நஞ்சனாபுரத்தில் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தலா மூன்று சென்ட் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. இது 1988ல் இருந்து வழக்கு தொடர்ந்ததால், பயனாளிகளுக்கு வழங்க முடியாமல் தள்ளி போய் வந்தது. உச்சநீதிமன்றத்திலும் இந்த வழக்கு முடிவுக்கு வந்து, நேற்று அமைச்சர் 23 பயனாளிகளுக்கும் இலவச பட்டா வழங்கினார்.



அமைச்சர் ராமலிங்கம் கூறியதாவது: செயின் பறிக்கும் திருடர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அதன்படி தான் நில அபகரிப்பு வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தி.மு.க.,வினர் நில அபகரிப்பில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.,வினர் மீதும் கொடுத்துள்ள புகார் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

கலெக்டர் ஆனந்தகுமார் மாற்றத்துக்கும், தோல் தொழிற்சாலை மீது எடுத்த நடவடிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கலெக்டர் காமராஜ், ஏற்கனவே சாயப்பட்டறைகளை இடித்து தள்ளியவர்தான். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், கிட்டுசாமி, கலெக்டர் காமராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகா, அரசு வக்கீல் துரை சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us