Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/கன்னியாகுமரியில் சுற்றுலா தகவல் மையம் : சுற்லா ஆணையர் தகவல்

கன்னியாகுமரியில் சுற்றுலா தகவல் மையம் : சுற்லா ஆணையர் தகவல்

கன்னியாகுமரியில் சுற்றுலா தகவல் மையம் : சுற்லா ஆணையர் தகவல்

கன்னியாகுமரியில் சுற்றுலா தகவல் மையம் : சுற்லா ஆணையர் தகவல்

ADDED : ஜூலை 24, 2011 12:57 AM


Google News

கன்னியாகுமரி : கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்க, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தமிழக சுற்றுலா துறை ஆணையர் டாக்டர் ஏ.சி.மோகன்தாஸ் கூறினார்.கன்னியாகுமரியில் 14 கோடி ரூபாய் செலவில் நடந்துவரும் மெகா சுற்றுலா திட்டத்தை ஆய்வு செய்வதற்காக தமிழக சுற்றுலாத்துறை ஆணையர் டாக்டர் மோகன்தாஸ் நேற்று கன்னியாகுமரி வந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:கன்னியாகுமரி கடற்கரையை நவீன முறையில் அழகுபடுத்துவதற்காக தற்காலிக மெகா சுற்றுலாதிட்டம் தயார் செய்யப்பட்டு 14.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.



அதில் 19 பணிகள் நடந்து வருகிறது. மூன்று பணிகள் நிறைவடைந்துள்ளது. ஒன்று மூன்று பெரிய ஹைமாஸ் விளக்குகளும் 10 மினி ஹைமாஸ் விளக்கும், இரண்டாவதாக கழிப்பறையும், மூன்றாவதாக கடற்கரை தடுப்புசுவர் பணியும் முடிவடைந்துள்ளது.அனைத்து பணிகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிய பஸ்-ஸ்டாண்ட் அருகில் சுற்றுலாதகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இடம் தேர்வு நடந்து வருகிறது. இந்த தகவல் மையத்தில் பேக்ஸ், இன்டர்நெட், செல்போன் சார்ஜ், ஏ.டி.எம் போன்ற வசதிகள் அமையும், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதேபோல் கேரளாவில் உள்ளது போன்று தமிழ்நாட்டில் சுற்றுலா சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்:-பேட்டியின் போது சுற்றுலா அதிகாரி ஹரிராதாகிருஷ்ணன் உடனிருந்தார். முன்னதாக மெகா சுற்றுலா திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us