/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கி.கிரி நகராட்சி தலைவர் பதவி பொது பிரிவுக்கு மாற்றம்? பரபரப்பால் விருப்ப மனு குவிகிறதுகி.கிரி நகராட்சி தலைவர் பதவி பொது பிரிவுக்கு மாற்றம்? பரபரப்பால் விருப்ப மனு குவிகிறது
கி.கிரி நகராட்சி தலைவர் பதவி பொது பிரிவுக்கு மாற்றம்? பரபரப்பால் விருப்ப மனு குவிகிறது
கி.கிரி நகராட்சி தலைவர் பதவி பொது பிரிவுக்கு மாற்றம்? பரபரப்பால் விருப்ப மனு குவிகிறது
கி.கிரி நகராட்சி தலைவர் பதவி பொது பிரிவுக்கு மாற்றம்? பரபரப்பால் விருப்ப மனு குவிகிறது
ADDED : செப் 17, 2011 01:24 AM
கிருஷ்ணகிரி: பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவி மற்றும் ஊத்தங்கரை டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவி, வரும் உள்ளாட்சி தேர்தலில் பொதுபிரிவுக்கு மாற்றப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து இவ்விரு பதவிக்கும் போட்டியிட அனைத்து கட்சிகளிலும் ஆண்களும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர், யூனியன் சேர்மேன், நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட சுழற்சி முறையில் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உள்ளாட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சுழற்சி முறையில் தேர்தல் ஆணையத்தால் செய்யப்படும் இந்த ஒதுக்கீடு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்யும் வகையில் சட்டம் உள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டது. ஊத்தங்கரை டவுன் பஞ்சாயத்து தலைவர் பெண்கள் (தாழ்த்தப்பட்டோர்) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. வரும் உள்ளாட்சி தேர்தலில் கடந்த தேர்தலை போல் இல்லாமல் பொதுமக்கள் நேரடியாக நகராட்சி தலைவர் மற்றும் டவுன் பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும், தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை சேர்ந்தர்கள் தாங்கள் போட்டியிட அந்தந்த கட்சி தலைமையிடத்தில் விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட அனைத்து கட்சிகளிலும் ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே விருப்ப மனுக்களை அளித்து வந்தனர். சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு இருந்தது மாற்றி அமைக்கப்பட்டு, பொதுபிரிவினருக்கும், ஊத்தங்கரை டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவுக்கு இருந்தது பொதுப்பிரிவினருக்கும் மாற்றப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த பதவிகளுக்கு போட்டியிட அனைத்து கட்சிகளிலும் ஆண்களும் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.