ADDED : ஜூலை 26, 2011 11:18 PM
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த ஆக்கனூரில் மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மங்களூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி தலைமை தாங்கி மண் மற்றும் பாசன நீர் பரிசோதனையின் அவசியம் குறித்து பேசினார். உதவி வேளாண் அலுவலர் ரமேஷ் வரவேற்றார். கடலூர் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி மண் மாதிரி சேகரிக்கும் முறை, மண்ணில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் சீர்திருத்த முறைகள் குறித்து பேசினார். மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் தரணி காமாட்சி பாசன நீர் மாதிரி சேகரிக்கும் முறை, பாசன நீரில் ஏற்படும் பிரச்னைகள், சீர்திருத்த முறைகள் குறித்து பேசினார்.
மங்களூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தசாமி நுண்ணூட்ட சத்துக்கள் இடுவதன் அவசியம் குறித்து பேசினார். ஆக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். உதவி வேளாண்மை அலுவலர் மேகநாதன் நன்றி கூறினார்.