/உள்ளூர் செய்திகள்/மதுரை/அமெரிக்கா செல்வதற்கான விசாமுன்பு போல அதிகரிக்க வேண்டும்அமெரிக்கா செல்வதற்கான விசாமுன்பு போல அதிகரிக்க வேண்டும்
அமெரிக்கா செல்வதற்கான விசாமுன்பு போல அதிகரிக்க வேண்டும்
அமெரிக்கா செல்வதற்கான விசாமுன்பு போல அதிகரிக்க வேண்டும்
அமெரிக்கா செல்வதற்கான விசாமுன்பு போல அதிகரிக்க வேண்டும்
ADDED : ஜூலை 30, 2011 03:17 AM
மதுரை:''அமெரிக்கா செல்வதற்கு தற்போது வழங்கும் விசா, மூன்றில் ஒரு பங்காக
குறைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு தொழில்
வர்த்தக சங்க கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில்
பணியாற்றுவதற்கான விசா வழங்குவது குறித்த கருத்தரங்கில் சங்க முதுநிலை
தலைவர் ரத்னவேலு பேசியதாவது:அமெரிக்கா படிக்கச் செல்லும் மாணவர்கள்,
வேலைக்கு செல்வோருக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் விசாக்கள் வழங்கப்பட்டன.
தற்போது 65 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒருபங்கு மட்டுமே விசா
தருவதால் படிப்பு, வேலை தொடர்பான அமெரிக்கா செல்வது சிரமமாக உள்ளது. இரண்டு
சதவீத அமெரிக்கப் பொருட்கள் தான் இந்தியாவுக்கு இறக்குமதி
செய்யப்படுகிறது. ஆனால் அமெரிக்க வர்த்தகத்தில் இந்தியா 13வது இடத்தில்
உள்ளது. இந்தியா, அமெரிக்க வர்த்தகம் 3700 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியா,
அமெரிக்காவில் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது குறித்த வர்த்தக
சந்திப்பு நடைபெற வேண்டும். அதன்மூலமே இருநாட்டின் தேவைகளையும் நிறைவேற்ற
முடியும், என்றார்.அமெரிக்க தூதரக சென்னை விசா அதிகாரிகள் சாரா கிளைமர்,
காத்ரீன் ரீடி விளக்கம் அளித்தனர். சங்கத் தலைவர் ஜெகதீசன், செயலாளர்
ராஜமோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.