கவுன்சிலிங் தகவல் தெரிவிக்கப்படாத மாணவருக்கு இடம்: ஐகோர்ட் உத்தரவு
கவுன்சிலிங் தகவல் தெரிவிக்கப்படாத மாணவருக்கு இடம்: ஐகோர்ட் உத்தரவு
கவுன்சிலிங் தகவல் தெரிவிக்கப்படாத மாணவருக்கு இடம்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை : 'கவுன்சிலிங் பற்றி, கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படாத மாணவனை, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்க்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஒதுக்கீட்டின்படி சதீஷ்குமாரின் வரிசை எண் 399 ஏ. முதல்கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, சதீஷ்குமாருக்கு தகுதியுள்ளது. ஆனால், கவுன்சிலிங் தொடர்பாக எந்தக் கடிதமும் வராததால், அவர் கலந்து கொள்ளவில்லை.
நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு கடிதம் எதுவும் அனுப்பாமல், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாதது அவரது தவறு என, அரசுத் தரப்பில் நியாயப்படுத்த முடியாது. விளக்கக் குறிப்பேட்டின்படி, கவுன்சிலிங் தொடர்பாக, தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம். ஒரு இடத்தைக் காலியாக வைத்திருக்க வேண்டும் என, ஏற்கனவே ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. எனவே, எம்.பி.பி.எஸ்., படிப்பில் மனுதாரரைச் சேர்க்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.