/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க வட்டக்கிளை கூட்டம்ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க வட்டக்கிளை கூட்டம்
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க வட்டக்கிளை கூட்டம்
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க வட்டக்கிளை கூட்டம்
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க வட்டக்கிளை கூட்டம்
ADDED : செப் 04, 2011 01:59 AM
சிதம்பரம்:தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க வட்டக்கிளை கூட்டம்
சிதம்பரத்தில் நடந்தது.மாநில துணைத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.
மாவட்டத் தலைவர் கண்ணன், இணைச் செயலர் நடராஜன் புதிய நிர்வாகிகளை
வாழ்த்திப் பேசினார். கூட்டத்தில் சிதம்பரம் வட்டத் தலைவராக முகமது
இப்ராகிம், கவுரவ தலைவராக சந்தானம், செயலராக திருநாராயணன், இணைச் செயலராக
சந்தானம், பொருளாளராக பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியமாக 3,500ம், பண்டிகை முன்பணம் 2,000 வழங்க வேண்டும்
என அரசுக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.