/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சுத்தமான பாலாற்று குடிநீர் வழங்க கோரிக்கைசுத்தமான பாலாற்று குடிநீர் வழங்க கோரிக்கை
சுத்தமான பாலாற்று குடிநீர் வழங்க கோரிக்கை
சுத்தமான பாலாற்று குடிநீர் வழங்க கோரிக்கை
சுத்தமான பாலாற்று குடிநீர் வழங்க கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2011 11:12 PM
பாலாற்று குடிநீர் வழங்க, காஞ்சிபுரம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.காஞ்சிபுரம் மக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் செயற்குழு கூட்டம், சங்கத் தலைவர் மதனகோபால் தலைமையில் நடந்தது.
செயலர் ரவி, பொருளாளர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் போது, பொதுமக்களிடம் கூடுதலாக பணம் வசூலிப்பதைக் கண்டித்தும், நுகர்வோர்களை முன்னறிவிப்பின்றி, ஒரு ஏஜன்சியிலிருந்து மற்றொரு ஏஜன்சிக்கு மாற்றுவதைக் கண்டித்தும், சமையல் சிலிண்டர் சப்ளையில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தெருமுனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.பாதாள சாக்கடை அடைப்புகளை உடனடியாக நீக்க வேண்டும்; சுத்தமான பாலாற்று குடிநீரை வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் முருகேசன், இணைச் செயலர் தியாகேஸ்வன், துணைச் செயலர் தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- என்.ஏ.கேசவன் -


