தி.மு.க.,வினர் ஆக்கிரமித்த நிலங்கள் மீட்கப்படும்: அமைச்சர் தங்கமணி உறுதி
தி.மு.க.,வினர் ஆக்கிரமித்த நிலங்கள் மீட்கப்படும்: அமைச்சர் தங்கமணி உறுதி
தி.மு.க.,வினர் ஆக்கிரமித்த நிலங்கள் மீட்கப்படும்: அமைச்சர் தங்கமணி உறுதி

சென்னை : ''அரசு நிலங்களை இலவசமாக, பினாமி பெயர்களில் தி.மு.க.,வினர் செய்துள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, விசாரணை நடந்து வருகிறது.
வருவாய்த் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு, அமைச்சர் தங்கமணி அளித்த பதில்: விரைவுப் பட்டா மாறுதல் திட்டத்தை, இந்த அரசு அறிவித்தது. ஒவ்வொரு கிராமத்திலும், நில உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கள் பற்றி, மனு செய்து, பதிவேட்டில் பதிந்து, பட்டா மாறுதல் பெற வேண்டும். இதற்காக, வாரந்தோறும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராமங்களுக்குச் சென்று, அன்று முழுவதும் அங்கிருந்து, மனுக்கள் மற்றும் பத்திரத்தின் நகலைப் பெற்றுக் கொண்டு, ஒப்புகைச் சீட்டு வழங்குவர். கடந்த ஒன்றரை மாதத்தில், 2 லட்சத்து 45 ஆயிரத்து 475 பட்டா மாறுதல் மனுக்கள் பெறப்பட்டு, 2 லட்சத்து 22 ஆயிரத்து 811 பட்டாக்கள் மாற்றம் செய்து தரப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில், 99 ஆயிரத்து 900 மனுக்கள் பெற்று, அதில் 50 சதவீத மனுக்கள் மீது தான் தீர்வு காணப்பட்டது. அரசின் இரண்டு ஏக்கர் இலவச நிலம் திட்டத்தில், 30 ஆயிரத்து 477 ஏக்கர் நிலம் தான், 33 ஆயிரத்து 558 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தரிசு நிலம் வைத்திருப்போருக்கு, அதை மேம்படுத்தித் தருவதாகக் கூறியதையும் சேர்த்து, 10 லட்சம் ஏக்கர் என தவறாகக் கணக்குத் தெரிவித்தனர்.
அதேபோல,இத்திட்டத்தில் போலி பெயர்களில் நிறையப் பேருக்கு நிலம் ஒதுக்கியுள்ளனர். திருவள்ளூரில் மட்டும், அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, விசாரணை நடந்து வருகிறது. தி.மு.க., நபர் ஒருவரிடம் இருந்து, பத்து ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. வைகை அணையை ஒட்டியுள்ள பகுதியில், வைகை சேகர், கிரி ஆகியோர் ஆக்கிரமித்திருந்த 17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சிலருக்கு நிலம் கொடுத்திருந்த போதிலும், தங்கள் நிலம் எங்கு உள்ளது என்று அவர்கள் தேடி வருகின்றனர். நிலத்தைக் கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் கொடுக்க உள்ளனர். பெரியகுளம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நிலம் கொடுத்ததாகக் கணக்குக் காட்டப்பட்டது. ஆனால், அவர்களுக்கு அதுபற்றித் தெரியாது. இதுபோன்று, பினாமி பெயர்களில் அளிக்கப்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படும். நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.