Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/நல்ல நாள் இல்லாததால் கரூர் நகராட்சி ஆபீஸ் "வெறிச்'

நல்ல நாள் இல்லாததால் கரூர் நகராட்சி ஆபீஸ் "வெறிச்'

நல்ல நாள் இல்லாததால் கரூர் நகராட்சி ஆபீஸ் "வெறிச்'

நல்ல நாள் இல்லாததால் கரூர் நகராட்சி ஆபீஸ் "வெறிச்'

ADDED : செப் 28, 2011 11:45 PM


Google News

கரூர்: உள்ளாட்சி தேர்தல் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக பரபரப்பாக இருந்த கரூர் நகராட்சி அலுவலகம் நேற்று வெறிச்சோடி இருந்தது.

தலைவர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில், நேற்று 11 பேர் மட்டுமே கவுன்சிலர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர். கரூர் நகராட்சிக்கு வரும் அக்டோபர் 17 ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த 22ம் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கியது. கடந்த 26 ம் தேதி தலைவர் பதவிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு 46 பேர் மனுதாக்கல் செய்தனர். கடந்த 27 ம் தேதி தலைவர் பதவிக்கான பா.ம.க., வேட்பாளர் டானியா பழனிசாமி, ம.தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு 78 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று அமாவாசைக்கு மறுநாள் என்பதால் சென்டிமென்டாக மனுதாக்கல் செய்ய பெரும்பாலான கட்சி வேட்பாளர்கள் வரவில்லை. கரூர் நகராட்சி 16 வது வார்டு தி.மு.க., வேட்பாளர் மணிராஜ், இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் சக்திவேல், சிங்கார வேல், மோகன்குமார், பழனிசாமி உள்பட 11 பேர் மட்டுமே நேற்று மனுதாக்கல் செய்தனர். தேர்தலில் போட்டியிட வேட்புமனு வாங்கக்கூட நேற்று யாரும் வரவில்லை. இந்நிலையில் இன்று (29ம் தேதி) கடைசி நாள் என்பதால் கரூர் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய கட்சியினர் படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தலைவர் பதவிக்கான காங்., வேட்பாளர் சுப்ரமணியம், தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணன், பா.ஜ., வேட்பாளர் கோபிநாத் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடுவோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இன்று வியாழன் என்பதால் மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை ராகுகாலமாகும். இதனால் இன்று மதியம் 1.30 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். காலை 11 மணிக்கு வேட்புமனு பெறப்படும் என்பதால் ராகுகாலம் தொடங்கும் முன்பு மதியம் 1.29 மணி வரை இரண்டரை மணி நேரம் கரூர் நகராட்சி அலுவலகம் இன்று களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us