Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாவட்டத்தில் "108'ன் பயன்பாடு குறைவாக உள்ளது :சுகாதார துறை அதிகாரி ஆதங்கம்

மாவட்டத்தில் "108'ன் பயன்பாடு குறைவாக உள்ளது :சுகாதார துறை அதிகாரி ஆதங்கம்

மாவட்டத்தில் "108'ன் பயன்பாடு குறைவாக உள்ளது :சுகாதார துறை அதிகாரி ஆதங்கம்

மாவட்டத்தில் "108'ன் பயன்பாடு குறைவாக உள்ளது :சுகாதார துறை அதிகாரி ஆதங்கம்

ADDED : ஆக 07, 2011 01:53 AM


Google News

குன்னூர் : ''நீலகிரியில் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையின் பயன்பாடு குறைவாக உள்ளது,'' என மாவட்ட சுகாதார துணை இணை இயக்குனர் கூறினார்.பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட கோடமலை கிராமத்தில் நடந்த முகாமில், மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் தாமோதரன் பேசுகையில், ''முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் 2.33 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது.

கடந்த மே மாதம் 31ம் தேதிக்கு முன்பு வரை குழந்தை பெற்றவர்களுக்கு, மகப்பேறு உதவி தொகையாக 6,000 ரூபாய் வழங்கவும், அதற்கு பின் 12 ஆயிரம் ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி தொகை வேண்டுவோர், அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். அவசர மருத்துவ உதவிக்கு '108' அவசர ஆம்புலன்ஸ் சேவை உள்ளது; மாநிலத்தில், நீலகிரி மாவட்டத்தில் தான் '108' அவசர ஆம்­புலன்ஸ் சேவை பயன்பாடு குறைவாக உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும்.



நிலச்சரிவு, மண்சரிவு, நிலநடுக்கம் உட்பட இயற்கை சீற்றங்களின் போது நிவாரண உதவிக்கு '1077' என்ற கட் ­­டணமில்லாத தொலைபேசி எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார். குன்னூர் பி.டி.ஓ., பாலச்சந்திரன் பேசுகையில், ''ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கால்வாயில் குப்பை கழிவுகளை கொட்டக் கூடாது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண் வேலைகளை செய்ய ஊராட்சி தலைவர்கள் பணி தேர்வு செய்து கொடுத்தால், உடனடியாக நிதி ஒதுக்கப்படும்,'' என்றார். கோடமலை ஊர் தலைவர் மீனாட்சி சுந்தரம் பேசுகையில்,'' கோடமலை கிராமத்தில் கடந்த 30 ஆண்டுக்கு முன் ராகி, கோதுமை விளைவிக்கப்பட்டன. காட்டெருமை உட்பட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், தற்போது அத்தகைய விளைப் பொருட்களை விளைவிக்க முடிவதில்லை,'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us