/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஜாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ., மீண்டும் கைதுஜாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ., மீண்டும் கைது
ஜாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ., மீண்டும் கைது
ஜாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ., மீண்டும் கைது
ஜாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ., மீண்டும் கைது
ஓமலூர்: ஓமலூர் அருகே ஜாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில், பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ., தமிழரசு நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஓமலூர் டி.எஸ்.பி.,யாக பதவியேற்ற சுப்ரமணியன், இவ்வழக்கு தொடர்பாக, கடந்த ஜூன் 25ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கில்,மாஜி எம்.எல்.ஏ., தமிழரசு ஆஜராகாமல் இருந்தார். தற்போது, டி.எஸ்.பி.,யாக உள்ள முத்துகருப்பன் நிலுவையில் கிடக்கும் இவ்வழக்கு மீது நடவடிக்கை மேற்கொண்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ.,தமிழரசு, நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால், நிலுவையில் உள்ள வழக்கில் கைது செய்ய, சிறையில் இருக்கும் மாஜி எம்.எல்.ஏ., வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒப்புதல் கடிதத்துடன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன் பேரில், தமிழரசை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நிலமோசடி வழக்கோடு சேர்த்து வரும் 9ம் தேதி ஆஜர்படுத்துமாறு நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அதனால், தமிழரசுக்கு நில மோசடி வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அடுத்து பாலமுருகன் தாக்கப்பட்ட வழக்கில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.