ADDED : ஜூலை 29, 2011 11:34 PM
காவேரிப்பபட்டணம்: ஆடி அமாவாசையையொட்டி இன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு, அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை, இன்று (ஜூலை 30) நடக்கிறது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு அம்மன் பிரகார உற்சவம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. தர்மபரி, வெளிப்பேட்டை தெரு, அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசையை ஒட்டி இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மதியம் 1 மணிக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு சாமபூஜை நடக்கிறது. தர்மபுரி அருகே முத்தம்பட்டி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வடைமாலை சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. தர்மபுரி எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், கீழ்த்தெரு தாச ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில்களில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளிக்கசவம் சாத்துதல், வெண்ணெய் காப்பு அலங்காரம் நடக்கிறது. காரிமங்கலம், கெரகோடஅள்ளி ஸ்ரீ வீரஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வடைமாலை சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.