/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வக்கீலை காரில் கடத்தி தாக்குதல்: மூவர் மீது போலீசார் வழக்கு பதிவுவக்கீலை காரில் கடத்தி தாக்குதல்: மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு
வக்கீலை காரில் கடத்தி தாக்குதல்: மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு
வக்கீலை காரில் கடத்தி தாக்குதல்: மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு
வக்கீலை காரில் கடத்தி தாக்குதல்: மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு
ADDED : ஜூலை 27, 2011 02:37 AM
கோவை : வக்கீலை காரில் கடத்தி, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கோவை, பீளமேடு விமான நிலையம் அருகிலுள்ள பூங்கா நகரில் வசிப்பவர் ஜெயபால் சந்திரன்(49); வக்கீல்.
இவர், கருமத்தம்பட்டி போலீசாரிடம் அளித்துள்ள புகார்: கோவை நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றுகிறேன். கருமத்தம்பட்டி, சாரதாம்பாள் நகரில் வசிக்கும் ஆரோக்கியராஜ் என்பவர் கடந்த 23ம் தேதி என்னை போனில் தொடர்பு கொண்டு, அவசரமாக அவரது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். எனது ஜுனியர் வக்கீலை அங்கு வருமாறு கூறிவிட்டு, நானும் சென்றேன். அங்கு சென்றபோது கர்நாடக மாநில போலீஸ் எஸ்.ஐ., மற்றும் இரு போலீசார் இருந்தனர். அவர்கள் என்னிடம், ஆரோக்கியராஜ், ஜோசப் உள்ளிட்ட நபர்கள் மீது கர்நாடக போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். அந்த வழக்கு தொடர்பாக நான் பேசிக்கொண்டிருந்த போது ஆரோக்கியராஜூம், அவரது மனைவியும் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக தெரிகிறது. அப்போது அவ்வீட்டில் உடுமலையைச் சேர்ந்த செந்தில், சக்தி கண்ணன் ஆகியோரும் இருந்தனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து நான் வெளியேறி வீட்டுக்குச் செல்வதற்காக நடந்து சென்றேன். அப்போது, மேற்படி நபர்கள் மூவரும் என்னை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி துடியலூர், செங்காளிபாளையத்திலுள்ள ஜோசப் என்பவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்தபோது மேலும் மூவர் வந்தனர். அதில் ஜான் பிரிட்டோ என்பவரும் இருந்தார். 'வக்கீல் யார்?' எனக்கேட்டபடியே என்னை சரமாரியாக அடித்தார். அருகில் நின்றிருந்த செந்தில் என்பவரை அழைத்து, 'எனது காரில் துப்பாக்கி உள்ளது; அதை எடுத்துவா, இவனை சுட்டுத் தள்ளிவிடுவோம்' என, மிரட்டினார். பின்னர், என்னை அங்கிருந்து ஆர்.எஸ்.புரம், டி.பி., ரோட்டிலுள்ள துணிக்கடைக்கும், சரவணம்பட்டிக்கும் காரில் அழைத்துச் சென்ற நபர்கள், கடைசியாக கருமத்தம்பட்டியில் இறக்கிவிட்டுவிட்டு தப்பிவிட்டனர். என்னை கடத்தி, அடித்து, உதைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, வக்கீல் ஜெயபால் சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, உடுமலையைச் சேர்ந்த செந்தில், சக்தி கண்ணன், கோவையைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ ஆகியோர் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். * தொப்பம்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் ஜான்பிராங்கிளின்(28). ஆர்.எஸ்.புரம், டி.பி.,ரோடு, பீட்டர் ரெடிமேடு ஸ்டோரில் மேலாளராக பணியாற்றுகிறார். கடந்த 23 அன்று இரவு 11.40 மணிக்கு கடை முன் நின்றிருந்தார். அப்போது, அங்கு ஜான்பிரிட்டோ (லாட்டரி அதிபர் மார்ட்டினின் மைத்துனர்) உள்ளிட்ட நான்கு பேர் வந்தனர். '÷ஷாரூம் உரிமையாளரை பார்க்க வேண்டும்' எனக்கூறி தகராறு செய்ததோடு, திட்டியும், தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்தனர். நள்ளிரவில் நடந்த தகராறு தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரித்து, ஜான்பிரிட்டோ(28), செந்தில்குமார்(28), மனுவேல்ராஜ்(41), செந்தில்(36) ஆகியோரை கைது செய்தனர்.