ADDED : ஜூலை 16, 2011 02:17 AM
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய
விபத்தில் சீர்காழியைச் சேர்ந்த இன்ஜினியர் இறந்தார்.சீர்காழி பனங்காட்டா
தெருவைச் சேர்ந்தவர் புரு÷ஷாத்தமன், 40. கடலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணி
செய்யும் தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.கடந்த
மாதம் 25ம் தேதி பணி முடிந்து கடலூரில் இருந்து சீர்காழிக்கு இண்டிகா
காரில் சென்று கொண்டிருந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டி அருகே
செல்லும்போது சாலையில் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கார்
மோதியது.இவ்விபத்தில் காரை ஓட்டிச்சென்ற புரு÷ஷாத்தமன் படுகாயமடைந்தார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இறந்தார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.