Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கழிவுநீர் செல்லும் பிரச்னை அடிதடி தகராறில் 6 பேர் காயம்

கழிவுநீர் செல்லும் பிரச்னை அடிதடி தகராறில் 6 பேர் காயம்

கழிவுநீர் செல்லும் பிரச்னை அடிதடி தகராறில் 6 பேர் காயம்

கழிவுநீர் செல்லும் பிரச்னை அடிதடி தகராறில் 6 பேர் காயம்

ADDED : ஆக 08, 2011 04:06 AM


Google News
எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே கழிவுநீர் பிரச்னையால் முன் விரோதம் காரணமாக இரண்டு குடும்பங்களை சார்ந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டும் ஒரு நபரை கம்பால் அடித்தும் காயம் ஏற்பட்டு 6 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, எட்டயபுரம் அருகே மாசார்பட்டி போலீஸ் சரகம் செங்கோட்டை கிராமம் உள்ளது.

இக்கிராமத்தில் குருசாமி மகன் குருசாமி என்பவரின் வீட்டுக்கழிவுநீர் வேலாயுதம் மகன் கந்தசாமி என்பவரின் வீட்டுக்கு முன்பாக செல்லுவதால் இதுகுறித்து நீண்ட நாட்களாக இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு தீராத பிரச்னையாக இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு குருசாமி மகன் சந்திபோஸ் என்பவர் கந்தசாமி (70) கந்தசாமி மகன்கள் சரவணன் முருகானந்தம்(42), வேல்முருகன்(36) சண்முகசுந்தரம் மனைவி மாரியம்மாள் (41), கல்யாண சுந்தரம் மனைவி ஜெயலட்சுமி (39) ஆகியோர்களை அரிவாளால் வெட்டியதில் படுகாயடைந்த இந்த 5 பேர் விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதை தடுத்து பதிலுக்கு கந்தசாமி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சந்திரபோசை கம்பால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த சந்திரபோஸ் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் மாசார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கிரேஸ்சோபியாபாய் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us