Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/டிராக்டரால் வீட்டை இடித்துசேதப்படுத்தியவர் கைது

டிராக்டரால் வீட்டை இடித்துசேதப்படுத்தியவர் கைது

டிராக்டரால் வீட்டை இடித்துசேதப்படுத்தியவர் கைது

டிராக்டரால் வீட்டை இடித்துசேதப்படுத்தியவர் கைது

ADDED : ஜூலை 21, 2011 12:58 AM


Google News
ஊத்துக்கோட்டை:டிராக்டரால் வீட்டை இடித்து சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.பென்னலூர்பேட்டையை அடுத்த, கூனிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்.

இவருக்கு கை, கால்கள் செயல் இழந்து விட்டது. இவரது மனைவி துளசி, 38. இவர்கள் இருவரும் அப்பகுதியில் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் குடிசை போட்டு வசித்து வந்தனர்.அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம், 33, துளசியை தனது ஆசைக்கு இணங்கும்படி கூறினார், துளசி மறுக்கவே ஆத்திரமடைந்த வெங்கடாசலம், டிராக்டரை ஓட்டி வந்து, சொக்கலிங்கத்தின் வீட்டை இடித்து தள்ளினார்.இது குறித்து, பென்னலூர்பேட்டை போலீசில் துளசி அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us