Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வயிரவன்பட்டி கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்

வயிரவன்பட்டி கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்

வயிரவன்பட்டி கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்

வயிரவன்பட்டி கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்

ADDED : ஜூலை 26, 2011 11:09 PM


Google News

திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகேயுள்ள என்.வைரவன்பட்டி வயிரவர் கோயிலில் வெள்ளி ரத வெள்ளோட்டம் நடந்தது.ஆடி மாதம் தேரோட்டத்தை முன்னிட்டு நடைபெறும் மகாஉற்சவத்தில் இந்த ஆண்டு முதல் காலையில் சுவாமி புறப்பாட்டிற்கான புதிய வெள்ளி ரதம் உருவாக்கப்பட்டுள்ளது.நேற்று காலை வயிரவ குருக்கள் வேத ஆகமம் மொழிந்து வெள்ளோட்டத்தை துவக்கினார்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கதலைவர் சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ.பழனியப்பன், சக்தி திருநாவுக்கரசு, கரு.பழனியப்பன், அருணாசலம், செயலர் வெங்கடாசலம்,துணைத் தலைவர் லெட்சுமணன், பொருளாளர் ராமசாமி, இணைச் செயலாளர் பழனியப்பன் முன்னிலையில் வெள்ளிக் கலசத்தில் வயிரவ பகவானை ஆவாகரணம் செய்து வெள்ளி ரத வெள்ளோட்டம் நடந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us