ADDED : ஜூலை 13, 2011 11:44 PM
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு ஊராட்சி இளைஞர் காங்சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.
ஆனந்தன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் வாசுதேவன் வரவேற்றார். கிராம தலைவர் லட்சுமிபதி, முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மாவட்ட இளைஞர் காங்துணைத் தலைவர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மேல்மாம்பட்டு கிராம ஏரியின் நடுவில் உள்ள உயர் மின்அழுத்த கம்பத்தை மாற்றி அமைக்கக் கோருவது. பூட்டிக் கிடக்கும் பொது நூலகத்தை திறக்க வலியுறுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


