சீரமைக்காத ரோடு : விவசாயிகள் சிரமம்
சீரமைக்காத ரோடு : விவசாயிகள் சிரமம்
சீரமைக்காத ரோடு : விவசாயிகள் சிரமம்
ADDED : ஜூலை 23, 2011 10:37 PM
கூடலூர் : லோயர்கேம்ப் பகவதியம்மன் கோயிலில் இருந்து காஞ்சிமரத்துறைக்கு செல்வதற்கு 3 கி.மீ., தூர ரோடு உள்ளது.
அப்பகுதியில் விளையும் தக்காளி, கத்திரிக்காய், சூரியகாந்திபூ, தேங்காய் உள்ளிட்ட விளைபொருட்களை இந்த ரோடு வழியாகத்தான் கொண்டு வரவேண்டும். கடந்த ஆண்டு பெய்த கன மழையால் ரோட்டின் ஒரு பகுதியில் அரிப்பு ஏற்பட்டு டிராக்டர், ஜீப், மினிலாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் விளைபொருட்களை இரு சக்கர வாகனத்தில் கொண்டு வருகின்றனர். பல மாதங்களாக சேதமடைந்துள்ள ரோட்டை சீரமைக்க விவசாயிகள் பல முறை கோரிக்கை விடுத்தும் சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


