Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஏரி நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

ஏரி நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

ஏரி நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

ஏரி நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

ADDED : ஜூலை 13, 2011 01:41 AM


Google News

வேலூர் :வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ப.முத்தப்பட்டி சென்னமூர்த்தி மகள் சரண்யா (16).

இவர், பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அதேஊரைச் சேர்ந்த சங்கர் மகள் பிரித்தி (15). இவர், திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தார். சரண்யாவும், பிரித்தியும் தோழிகள். நேற்று காலை 7 மணிக்கு, இருவரும் முத்தம்பட்டி ஏரியில் குளித்தபோது, நீரில் மூழ்கி இறந்தனர். தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு படையினர் , 2 மணி நேரம் போராடி இருவரது உடலை மீட்டனர். திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us