ADDED : ஜூலை 15, 2011 01:27 AM
மதுரை : மதுரை வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் கலை, அறிவியல் மன்றங்களின் துவக்க விழா முதல்வர் ரோசிலா தலைமையில் நடந்தது.
நிறுவனர் முத்துராமலிங்கத்தின் மனைவி குஞ்சரவள்ளி குத்துவிளக்கேற்றி மன்றங்களை துவக்கினார். 'மன்றங்களின் பயன்' என்ற தலைப்பில் கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் பேசினார். துணை முதல்வர் விஜயராஜன் வரவேற்றார். தமிழாசிரியர் டெய்சி அமுதா நன்றி கூறினார். மகேந்திரன் தொகுத்து வழங்கினார்.


