/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குடிபோதையில் தடுமாறி கிணற்றில் விழுந்த பெண் பலிகுடிபோதையில் தடுமாறி கிணற்றில் விழுந்த பெண் பலி
குடிபோதையில் தடுமாறி கிணற்றில் விழுந்த பெண் பலி
குடிபோதையில் தடுமாறி கிணற்றில் விழுந்த பெண் பலி
குடிபோதையில் தடுமாறி கிணற்றில் விழுந்த பெண் பலி
ADDED : ஜூலை 13, 2011 10:18 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் குடிபோதையில் தடுமாறி சென்ற பெண் கிணற்றில்
விழுந்து இறந்தார்.
பொள்ளாச்சி அடுத்த மரப்பேட்டை பொட்டுமேடு பகுதியை
சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி பங்கஜம்(33). இவர்களுக்கு திருமணமாகி
மூன்று குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவி இருவரும் தேர்நிலையம் பகுதியில்
கலாசு வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு கலாசு வேலை முடிந்ததும்,
கணவன், மனைவி இருவரும் மதுபானம் குடித்துள்ளனர். வீட்டு போதையில் தடுமாறி
சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் பாத்ரூம்
செல்வதற்காக பங்கஜம் சென்றுள்ளார். போதை தெளியாத நிலையில் தடுமாறி நடந்து
சென்றுள்ளார். நிதானம் இல்லாமல் இருந்ததால் அருகிலுள்ள கிணற்றில் தவறி
விழுந்து இறந்தார். கிணற்றுக்குள் திடீரென அலறல் சப்தம் கேட்டதும்
அங்கிருந்தவர்கள் பங்கஜத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர் நீரில்
மூழ்கி இறந்தார். மகாலிங்கபுரம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ
இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர்.


