/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தமிழகம்,கேரளாவில் முட்டை விலை 252 காசுதமிழகம்,கேரளாவில் முட்டை விலை 252 காசு
தமிழகம்,கேரளாவில் முட்டை விலை 252 காசு
தமிழகம்,கேரளாவில் முட்டை விலை 252 காசு
தமிழகம்,கேரளாவில் முட்டை விலை 252 காசு
ADDED : ஜூலை 15, 2011 12:55 AM
நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 252 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டை விலையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவால், பண்ணையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 257 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 5 காசுகள் குறைத்து, 252 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக, முட்டை விலையில் சரிவு ஏற்பட்டு வருவதால், கோழிப்பண்ணையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம்: ஹைதராபாத் 228 காசு, விஜயவாடா, தனுகு 236 காசு, சென்னை 263 காசு, மைசூர் 253 காசு, பெங்களுரூ 255 காசு, மும்பை 255 காசு, டில்லி 243 காசு, பர்வாலா 226 காசு, கொல்கத்தா 275 காசு.இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை, 38 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, 43 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.