/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நில அபகரிப்பு புகார்கள் குவிகிறது: தனிப்பிரிவு போலீசார் திணறல்நில அபகரிப்பு புகார்கள் குவிகிறது: தனிப்பிரிவு போலீசார் திணறல்
நில அபகரிப்பு புகார்கள் குவிகிறது: தனிப்பிரிவு போலீசார் திணறல்
நில அபகரிப்பு புகார்கள் குவிகிறது: தனிப்பிரிவு போலீசார் திணறல்
நில அபகரிப்பு புகார்கள் குவிகிறது: தனிப்பிரிவு போலீசார் திணறல்
கடலூர்சகடலூர் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 120க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்கள் குவிந்துள்ளதால் தனிப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.கஆட்சியில் அதிகாரம் படைத்தவர்கள் விவசாயிகளை மிரட்டி நிலங்களை அபகரித்துள்ளதாகவும், தேர்தலில் அ.தி.மு.கவெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என கூறினார்.அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, கடந்த தி.மு.கஆட்சியில் நடந்த நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க மாவட்டம் தோறும் தனிப்பிரிவு துவங்கப்படும் என்றார்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க எஸ்.பிபகலவன் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பிமுத்துராஜா தலைமையில் தனிப்பிரிவு கடந்த 4ம் தேதி துவங்கப்பட்டது.மேலும், 2006ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை நிலம் அபகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் புகார் தரலாம் என அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
மேலும், பொதுமக்களிடமிருந்து 20 புகார்கள் வந்தன.இந்நிலையில் கடந்த 10ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு குறித்த புகார்களை விசாரிக்க மாவட்டம் தோறும் தனிப்பிரிவு ஏற்படுத்தவும், புகார்களை விசாரித்து நில அபகரிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து நிலம் மற்றும் வீடுகளை இழந்த பலர் உரிய ஆவணங்களுடன் கடலூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்வது அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்துள்ளன.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பதிவு செய்த போலீசார், அந்த புகாரின் உண்மை தன்மை அறியும் பொருட்டு, மனு கொடுத்தவர் மற்றும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆகிய இரு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து அவர்களது ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த முதல்கட்ட விசாரணையில், நில அபகரிப்பு மற்றும் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்ட 7 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்கள் மீதான முதல் கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.நில மோசடி புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், கடலூரில் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் மக்கள் கூட்டமாக உள்ளது. நில அபகரிப்பு புகார்கள் நாளுக்கு நாள் குவிந்து வருவதால் தனிப்பிரிவு போலீசார் விழி பிதுங்கியுள்ளனர்.


