/உள்ளூர் செய்திகள்/தேனி/வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான்கொம்புகள் பறிமுதல்வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான்கொம்புகள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான்கொம்புகள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான்கொம்புகள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான்கொம்புகள் பறிமுதல்
ADDED : ஜூலை 13, 2011 10:25 PM
கூடலூர் : தேனி மாவட்டம் கூடலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான் கொம்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கூடலூர் கன்னிகாளிபுரத்தில் மான்கொம்புகளை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசாரும், கம்பம் வனத்துறையினரும் சோதனை நடத்தினர். பேச்சியம்மாள் (60) வீட்டில் நடந்த சோதனையில் 4 மான் கொம்புகள், 2 அடி நீளமுள்ள சந்தனமரக்கட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பேச்சியம்மாளிடம் மான் கொம்புகள் எப்படி வந்தன. இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


